Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும்! மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும்!
முதல் பக்கம் » மகா சிவராத்திரி 2018
சிவராத்திரி கொண்டாடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
சிவராத்திரி கொண்டாடுவது ஏன்?

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
04:02

கதை 1:  ஒருமுறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய -  சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டதால், எங்கும் இருள் சூழ்ந்தது. உலகத்தார் கலங்கினர். உடனே சிவன், நெற்றிக்கண்ணை திறந்தார்.  அதிலிருந்து கிளம்பிய ஜூவாலை ஒளியை வணங்கினாலும், அதன் வெப்பம் தாளாமல் அனைவரும் பயந்தனர். பார்வதிதேவி, சிவனை அன்று  இரவு முழுக்க விழித்திருந்து அபிஷேகம் செய்து வணங்கி, அவரை குளிரச்செய்து, மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ வேண்டினாள். அவள்  விழித்திருந்து வணங்கிய இரவே, சிவராத்திரியாக கொண்டாட ப்படுகிறது. சிவனை வழிபட்ட பார்வதி, “இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை  வழிபட்டேனோ... அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு, வாழும் காலத்தில் செல்வமும், வாழ்வுக்கு பின் சொர்க்கமும் தரவேண்டும்,”  என்றாள். சிவனும் அந்த வரத்தை அருளினார்.

கதை 2: சாகாவரம் தரும் அமிர்தத்தை எடுக்க, தேவர்களும் அசுரர்களும் இணைந்து திருமால் சயனம் செய்யும் பாற்கடலை கடைந்தனர். வாசுகி  பாம்பை கயிறாகவும், மந்தர மலையை மத்தாகவும் கொண்டு கடைந்த போது, பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. சிவன் அதை  உருண்டையாக்கி வாயில் போட்டதும், மயங்கியது போல கிடந்து திருவிளையாடல் புரிந்தார். இது ஒரு திரயோதசி திதி நாளில் நடந்தது. அதனை  தொடர்ந்து வந்த சதுர்த்தசி திதியன்று இரவில், நான்கு ஜாமங்களிலும், தேவர்கள் அவருக்கு அபிஷேகம் செய்து வணங்கினர். அந்த நாளே  சிவராத்திரி.

 
மேலும் மகா சிவராத்திரி 2018 »
temple news
ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் ... மேலும்
 
temple news
சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு ... மேலும்
 
temple news
*  உலகாளும் இறைவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை ... மேலும்
 
temple news
மகா சிவராத்திரி தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண ... மேலும்
 
temple news
மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்களுக்கு சொர்க்கலோக பாக்கியம் கிடைக்கும்.  தொடர்ந்து 24 வருடங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar