பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
ஆனைமலை:ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவில், குண்டம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழாவுக்காக நேற்று மதியம், சர்க்கார்பதி வனப்பகுதியிலிருந்து, 104 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் கொண்டுவரப்பட்டது. இன்று, (பிப்., 14) காலை, 8:00 முதல், 9:00 மணிக்குள் கொடியேற்ற நிகழ்வு நடக்கிறது.தொடர்ந்து, மார்ச், 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு குண்டம் கட்டுதல், மதியம் அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல், இரவு, 9:00 முதல், 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்வுகள் நடக்கின்றன. மார்ச், 3ம் தேதி காலை, 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் குண்டம் பூ மிதித்தல் நடக்கிறது.