Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் விழா ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சிவராத்திரி விழா ஆணிக்கால் செருப்புடன் பூசாரி வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
01:02

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூரில் உள்ள கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது. சிவராத்திரி முன்னிட்டு நடக்கும் சுவாமி வீதியுலாவில், வேட்டைக்கார சுவாமி கோவில் பூசாரி ஆணிக்கால் செருப்புடன் ஊர்வலமாக நடந்து வருகிறார். நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூரில் மகாலட்சுமி, வீரபத்திர சுவாமி தொட்டம்மாள், வேட்டைக்காரசுவாமி கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் சிவராத்திரி முன்னிட்டு, இக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இங்குள்ள மகாலட்சுமி கோவில் பூசாரி அதிகாலை நேரத்தில், தலையில் தேங்காயை உடைத்து, சிறப்பு பூஜை நடத்துவார்.

வீரபத்திர சுவாமி:
தொட்டம்மாள் கோவிலில் கடந்த, 7ம் தேதி, நாள் குறித்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. நேற்றிரவு சக்தி அழைத்தல் பூஜை நடந்தது. இன்று காலை, 8:30 மணிக்கு சுவாமி கோவிலுக்கு வந்தடைகிறது. காலை, 9:00 மணிக்கு அன்னதானமும், மதியம், 12:00 மணிக்கு, பெரியசுவாமி அழைத்தலும், தொடர்ந்து அபிேஷகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜையும் நடக்கிறது. வேட்டைக்கார சுவாமி ஊர்வலத்தின் போது, கோவில் பூசாரி, காலில் ஆணிக்கால் செருப்பு அணிந்து ஊர்வலமாக நடந்து வருவார். தொடர்ந்து, சிறப்பு பூஜைகள், அபிேஷகம், அன்னதானம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இதேபோல, பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்றிரவு இரவு, 8:00 மணிக்கு சிவராத்திரி சிறப்பு பூஜைகள் துவங்கி, இன்று அதிகாலை வரை நடந்தது. விழாவையொட்டி எம்.எஸ். இசைப்பள்ளி, ஏ.என்.எஸ்., பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, நாட்டியாஞ்சலி, நாம சங்கீர்த்தனங்கள் உள்ளிட்டவை நடந்தது.செல்வபுரத்தில் உள்ள தன்னாசியப்பர் கோவில், இடிகரை வில்லீஸ்வரர் கோவில், வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில்களில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar