இறைவனின் விக்ரகங்கள் சவுமியம், போகம், யோகம், உக்கிரம் என்று நான்கு வகைப்படும். புன்சிரிப்புடன் அழகே உருவாக வீற்றிருக்கும் ராஜராஜேஸ்வரி, பார்த்தசாரதி, மீனாட்சி அம்மன், காமாட்சி அம்மன் போன்ற விக்ரகங்கள் சவுமிய (சாந்தம்) வகையைச் சார்ந்தவை. தன் மனைவியுடன் ஒரே பீடத்தில் நின்றபடி அல்லது அமர்ந்தபடி அருள்பாலிக்கும் விக்ரகங்கள் போக மூர்த்தி என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக ராதாகிருஷ்ணன், சீதாராமன், லட்சுமி நாராயணன், உமா மகேஸ்வரர், வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர் போன்ற விக்ரகங்கள். இதேபோல் யோக நிலையில் யோக நரசிம்மர், ஐயப்பன் போன்ற விக்ரகங்கள் யோக மூர்த்திகளாவர். கோபத்துடன் காட்சியளிக்கும் காளிதேவி, துர்க்கை அம்மன், வீரபத்திரர், உக்கிரநரசிம்மன், சாமுண்டீஸ்வரி போன்ற விக்ரகங்கள் உக்கிரமூ ர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.