ஆந்திர மாநிலம், கடப்பா அருகில் உள்ள தலம் ராயகோட்டி, தட்ச யாகத்தைச் சிதைத்த வீரபத்திரருக்கு இங்கு தனிக்கோயில் உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு பதினொரு நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 8-ம் நாள் ‘தட்சன் வதம்’ என்ற பெயரில் விழா நடத்தப்படும். அப்போது 365 படி அரிசியை சாதமாக்கி கிழங்கு வகைகள், அதிரசம், வேக வைத்த பூசணிக்காய் ஆகியவற்றை வீரபத்திரர் சன்னதியில் மலை போல் குவித்து வைப்பார்கள். பூசாரி வீரபத்திரரின் ஆயுதம் கொண்டு, அதைக் கிளறி சன்னதி முழுவதும் சிதறச் செய்வார். இது தட்சயாகத்தை வீரபத்திரர் சிதைத்த செயலை நினைவூட்டும். பின்னர் அதைப் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவார்கள்.