பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
சேலம்: மாசி அமாவாசையை முன்னிட்டு, சேலத்தில், இன்று, மயான கொள்ளை நிகழ்ச்சி நடக்கும். அதையொட்டி, கிச்சிப்பாளையம், நாராயணன் நகரிலுள்ள அங்காளம்மன் கோவில் முன், நேற்று, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்களில் சிலர், அம்மன் வேடம் தரித்து, கையில் குறக்கூடையுடன் புறப்பட்டனர். கோவிலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, ஊர்வலம் சென்று, யாசகம் கேட்டனர். மீண்டும், கோவிலுக்கு திரும்பி, வழிபாட்டில் ஈடுபட்டனர்.