பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், அருகே ராமர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, காவடி எடுத்தல் விழா, நேற்று நடந்தது. சத்தியமங்கலம் அருகே, கெம்மநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில், மஹா சிவராத்திரிக்கு அடுத்த, நாள் கொடி கம்பம் நட்டு, காவடி எடுத்து, கிராம பகுதிகளுக்கு ஊர்வலமாக சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம், கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து, 25 அடி உயரமுள்ள கொடிகம்பம், கொண்டு வந்து நடபட்டு, நேற்று காலையில், ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பொதுமக்கள் ஊர்வலமாக காவடி எடுத்து சென்று வழிபாடு செய்தனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.