பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
கோத்தகிரி:கோத்தகிரி அள்ளபிக்கை சிவன் கோவில் கும்பாபிேஷகம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.கோத்தகிரி புடியங்கி கிராமத்தில் பழமை வாய்ந்த அள்ளபிக்கை சிவன் கோவில் புனரமைப்பு பணி நிறைவடைந்த நிலையில், மகா கும்பாபிேஷகம் நடந்தது. விழாவை ஒட்டி, கோவில் புனிதப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, புனித நீருடன், வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம், கும்பஸ்தாபனம், வேதபாராயணம், முதல் கால பூர்ணாஹுதி நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, அதிகாலை, 4:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, நாடி சந்தானம், கடப்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. 5:30 மணிக்கு, கோவில் பூசாரி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், மகா கும்பாபிேஷகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு மகாதீபாராதனை பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், புடியங்கி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, காணிக்கை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம தலைவர் மாதன் மற்றும் செயலாளர் சந்திரன் முன்னிலையில், ஊர் மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதே போல, கோத்தகிரி அஜ்ஜூர் பாணலிங்கேஸ்வரர் கோவிலிலும், மகா கும்பாபிேஷகம் நடந்தது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பய பக்தியுடன் ஐயனை வழிப்பட்டனர்.