கரூர்: கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், மாசி மகத்தேரோட்டம் மற்றும் தெப்பத் திருவிழா வரும், 19ல் துவங்குகிறது. வரும், 21ல் துவஜாரோஹணம், மார்ச், 1ல் திருத்தேரோட்டம், 3ல் தெப்பத்திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, திருச்சி இணை கமிஷனர் கல்யாணி, உதவி கமிஷனர்கள் சூரியநாராயணன், சுரேஷ் ஆகியோர் செய்கின்றனர்.