பதிவு செய்த நாள்
16
பிப்
2018
01:02
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மாசி அமாவாசையை முன்னிட்டு மகா அன்னதானம் நடந்தது. முன்னதாக, சுவாமி, உற்சவர், நந்திக்கு, பால், பன்னீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. உற்சவர் உள்பிரகார வலம் நடந்தது. திருவாசக முற்றோதலுடன், மகா தீபாராதனை நடந்தது. .* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், ஆலத்துாரான்பட்டி பார்வதி சமேத பரமேஸ்வரன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமி மடம், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், அமாவாசை சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.