காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் சந்தவெளியம்மன் கோவில் உண்டியலில், 4.16 லட்சம் ரூபாய், காணிக்கையாக கிடைத்துள்ளது.பெரிய காஞ்சிபுரம் வெள்ளகுளம் பகுதியில், சந்தவெளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோவிலில் உள்ள, இரு உண்டியல் நேற்று திறக்கப்பட்டன.இதில், 4.15 லட்சம் ரூபாயும், 39 கிராம் தங்கமும், 155 கிராம் வெள்ளியும் கிடைத்தது.