தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் குன்றின் மீது அமைந்துள்ளது. கதிரேசன் கோயில். அங்கு சிலை வழிபாடு கிடையாது. முருகனின் அடையாளமாக ஒரு பெரிய வேல் மட்டுமே நடப்பட்டுள்ளது. குன்றின் அடிவாரத்தில் குகை ஒன்றுள்ளது. அதிலிருந்து ஒரு சுரங்கப்பாதை கயத்தாறு கட்டபொம்மன் கோட்டைக்கும், மற்றொன்று கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பத்திற்கும் செல்வதாகச் சொல்கிறார்கள்.