பதிவு செய்த நாள்
16
பிப்
2018
03:02
அருணகிரிநாதர் தமது கந்தர் அலங்காரத்தில் முருகப் பெருமானுடைய வேலின் 27 சிறப்புப் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொன்றையும் 4 முறை போற்றி அர்ச்சித்தால் 108 நாமாவளியாக ஆகும். அதுவே தடைகளைத் தகர்த்து வெற்றியைத் தரும் வேல் மந்திரமாக விளங்கும்.
1. இகல்வேல், 2. கட்டாரி வேல், 3. கதிர்வடிவேல், 4. கதிர்வேல், 5. குன்றமெட்டும் கிழித்தோடுவேல், 6. கூர்கொண்டவேல், 7. சித்ரவேல் 8. சினவடிவேல், 9. சூர்மார்புடன் கிரிஊடுருவத் துளைத்துப் புறப்பட்ட வேல், 10. செங்கேழடுத்த சினவடிவேல், 11. செஞ்சுடர்வேல், 12. செய்யவேல், 13. செவ்வேல், 14. சொன்ன (சொர்ண) கிரவுஞ் சகிரி ஊடுருவத் துளைத்த வைரவேல் 15. தனிவேல், 16. திருக்கைவேல், 17. படைப்பட்டவேல், 18. பராக்ரம வேல், 19. புரையற்ற வேல், 20. பொருவடிவேல், 21. போர்வேல், 22. வடிவேல், 23. விக்ரமவேல், 24. வெற்றிவேல் 25. வையிற்கதில் வடிவேல், 26. வைவேல், 27. வைவைத்தவேற்படை.