திருப்புத்துார்: எஸ்.வேலங்குடி சாம்பிராணி வாசகர் உறங்காப்புலி கருப்பர் கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழா பிப்.,10ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. பிப்.,13ல் சிவராத்திரி வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கருப்பரை வழிபட்டு வருகின்றனர். சிறப்பு வழிபாடாக பிப்.,17 ல் முதல் திருவிழாவும், நேற்று இரண்டாம் திருவிழாவும் நடந்தது. மகப்பேறு வேண்டியவர்கள் கரும்புத் தொட்டிலுடன் பிரார்த்தனை நிறைவேற்றினர். மேலும் பெரிய அரிவாள்களில் தங்கள் பெயர் பொறித்தும் படைக்கின்றனர். இடுப்பில் அலகு குத்தி சிறு தேர் இழுத்தும், காவடி,பால்குடம் எடுத்தும் பக்தர்கள் கருப்பரை வழிபட்டனர்.