பதிவு செய்த நாள்
20
பிப்
2018
12:02
ராமேஸ்வரம் : கச்சதீவு அந்தோணியார் ஆலய விழாவில் சிங்கள மொழியில் திருப்பலி நடக்க உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களர்களும் விழாவில் பங்கேற்கின்றனர். பிப்.23, 24ல் நடக்கவுள்ள கச்சதீவு விழாவில் ராமேஸ்வரத்தில் இருந்து 2,103 பக்தர்களும், இலங்கையில் இருந்து 6,000 தமிழர், சிங்களர்கள் பங்கேற்கின்றனர். பாரம்பரியமாக இந்திய, இலங்கை தமிழ் மீனவர்கள் பங்கேற்று வந்த நிலையில், இந்த ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களர்கள் பங்கேற்பது தமிழர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.முதன் முதலாக சிங்கள மொழியில் திருப்பலி நடக்க உள்ளது. காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்கே திருப்பலி பூஜை நடத்துவார் என யாழ்ப்பாணம் கலெக்டர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளீதரன் கூறியதாவது:பல ஆண்டுகளாக இந்திய, இலங்கை தமிழர்கள் பங்கேற்கும் கச்சதீவு விழாவில், முதன் முதலாக சிங்கள மொழியில் பூஜை நடத்துவது தமிழர்களின் உரிமையை பறிக்கும் செயல். பாரம்பரியமாக தமிழில் நடந்த பூஜைக்கு பதில், சிங்கள மொழியில் பூஜை நடத்துவது கண்டனத்திற்குரியது. மரபு மீறி சிங்களத்தில் பூஜை நடத்துவதை தடுக்கமத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம், என்றார்.