எடமச்சி : எடமச்சி கிராமத்தில், புதிதாக எல்லையம்மன் கோவில் கட்டும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது எடமச்சி. இக்கிராமத்தில், முத்தீஸ்வரர் கோவில், சவுமி நாராயண பெருமாள் கோவில், கன்னியம்மன் கோவில் உட்பட, பல கோவில்கள் உள்ளன.இங்குள்ள ஒவ்வொரு கோவில்களுக்கும் அந்தந்த கோவில்களுக்கான விசேஷ நாட்களில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடப்பது வழக்கம்.இந்நிலையில், கிராம எல்லை துவங்கும் பகுதியில், எல்லையம்மன் கோவில் கட்ட இப்பகுதி வாசிகள் தீர்மானித்தனர். இதையடுத்து, நன்கொடை வசூல் செய்து, அப்பகுதி குன்றின் மீது, கோவில் கட்டுமானப் பணி துவங்கி துவக்கியுள்ளனர். இப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.