பதிவு செய்த நாள்
20
பிப்
2018
02:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜர், காமாட்சியம்மன் கோவிலில், தீ தடுப்பு நடவடிக்கை குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.மதுரை மீனாட்சியம்மன், தஞ்சை பெரியகோவில், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில், திருவாலங்காடு சிவன் கோவில்களில், சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இதையடுத்து, தீயணைப்பு துறை சார்பில், காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில், பாதுகாப்பு நடவடிக்கையாக, தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி, நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சையத் முகமது ஷா உத்தரவின்படி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் கோவிலில், நேற்று, தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.