பதிவு செய்த நாள்
28
டிச
2011
10:12
கிருமாம்பாக்கம்: புதுச்சேரி அருகே கருங்கல்லால் ஆன, மேலும் ஒரு சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே உள்ள தமிழகப் பகுதியான, சிவனார்புரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில், கருங்கல் சாமி சிலைகள் பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இது வரை கடந்த இரண்டு ஆண்டுகளில் அங்காளம்மன், துர்கையம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட, 15 சிலைகள் கிடைத்துள்ளன.இந்த சிலைகள் அனைத்தும் தனியார் இடம் ஒன்றில் கொட்டகை போட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதே பகுதியைச் சேர்ந்த தமயந்தி என்பவர் வீட்டு தோட்டத்தில், அங்காளம்மன் சிலை ஒன்று கிடைத்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவனார்புரத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில், கருங்கல் சாமி சிலைகள் கிடைத்து வருவது உண்மையா, என்பதை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தலையிட்டு உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும்.