பதிவு செய்த நாள்
28
டிச
2011
10:12
கீழக்கரை : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மோகன்சாமி தலைமையில் நடந்த மண்டல பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு டிச.,18ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்தை தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் ரெகுநாதபுரம் முத்து நாச்சியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கிருந்து வண்ணக்கலவை பூசி பேட்டைதுள்ளினர். "சாமியே சரணம் ஐயப்பா முழக்கத்துடன் ஊர்வலமாக கோயில் வந்தடைந்தனர். பஸ்மகுளத்தில் உற்ஸவருக்கு 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது. இதை தொடர்ந்து மூலவருக்கு 33 வகையான அபிஷேகம், தீபாராதனை, பஜனை நடந்தது. பின்னர் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் செய்யப்பட்டது. நியூ லுக் கார் மெண்ட்ஸ் சரவணன், வி.ஏ.ஓ.,க்கள் கணேசன், சண்முகசுந்தரம், பட்டிணம் காத்தான் ஊராட்சி உறுப்பினர் கண்ணன், ராமநாதபுரம் தாயுமானவன், ரெகுநாதபுரம் ஆதிகேசவன், கே.செல்வம், எம்.ராஜூ, வாணி மணிகண்டன், நேருதாஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாடானை: திருவாடானை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் சிறப்பு தீப, ஆராதனைகள் நடந்தது. அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவில், ஐயப்பன் அலங்கார ஊர்வலம், வாணவேடிக்கைகளுடன் நடந்தது.