சாயல்குடி: சாயல்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டுமன்றத்தின் சார்பில் ஆன்மிக ஜோதி நகர்வலம் நடந்தது.
கடந்த பிப். 18 அன்று சக்தி கோஷம் முழங்க நடமாடும் ஜோதி தீபம் ஏற்றப்பட்டு, சாயல்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. வரும் 28 வரை நடக்க உள்ளதால், செவ்வாடை அணிந்த பக்தர்கள், வீடுகள் தோறும் ஜோதியில் இருந்து விளக்கு ஏற்றி வருகின்றனர்.