பதிவு செய்த நாள்
24
பிப்
2018
02:02
பெரியகுளம்: குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில்,பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், ஷிவ்கன்யா மற்றும் ஸ்ரீ கன்யா சகோ தரிகள், ஸ்ரீமத்பாகவதம் ஆன்மிகச்சொற்பொழிவு நிகழ்த்தினர்.
ஸ்ரீமத் பாகவதம் கேட்பதால், விரதம், தானம், தவம், கோடான கோடி பலனும், சர்வதோஷம் விலகி, சர்வம் மங்களம் உண்டாகும் என விளக்கினர். தொடர்ந்து கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், ருக்மணி கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப் பாளர் கிருஷ்ண சைதன்யதாஸ், பக்தர்கள் செய்தனர்.