விருதை கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திரம் பந்தல்கால் நடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2018 02:02
விருத்தாசலம், மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவிற்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம், மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு ஞாயிறன்று வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாரதனை நடந்தது. அன்று 7:30 மணியளவில் மேலாளர் குருநாதன் முன்னிலையில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அதில், வழக்கறிஞர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து தினசரி சுவாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்து, மார்ச் 21ம் தேதி கொடியேற்றம், 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 30ம் தேதி பங்குனி உத்திரம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை வருகின்றனர்.