பதிவு செய்த நாள்
27
பிப்
2018
05:02
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நாளை நடக்கிறது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து நந்தி, ஐந்து பிரகாரம், ஐந்து தேர் என ஐந்தின் சிறப்புகளைப் பெற்றது. இக்கோவிலில் மாசிமகப் பெருவிழா ஆண்டுதோறும் மாசிகப் பெருவிழா 12 நாட்கள் விமர்சையாக நடக்கும். அதன்படி, கடந்த 20ம் தேதி ஐந்து கொடிமரங்ளிலும் கொடியேற்றம் நடந்தது. அதையடுத்து, தினசரி பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிேஷகம் மகாதீபாரதனைகளுடன் விசேஷவாகனங்களில் வீதியுலா நடக்கிறது.
இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை அம்மன், முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்காக ஐந்து தேர்கள் செப்பனிடும் பணி இன்று முடிந்து, பொதுப்பணித்துறை சான்றிதழ் வழங்கியது. அதில், விருத்தகிரீஸ்வரர் 33 அடி உயர தேர், முருகர் 35, விருத்தாம்பிகை அம்மன் 45, விநாயகர் 56, சண்டிகேஸ்வரர் 31 அடி உயர தேர்களில் நாளை காலை 5:30 மணிமுதல் பவனி துவங்குகிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.