பதிவு செய்த நாள்
01
மார்
2018
02:03
ஓசூர்: ஓசூர் அடுத்த சூளகிரியில் உள்ள ரனமந்த குட்டை முனீஸ்வரன் கோவிலில் நடந்த பல்லக்கு உற்சவ திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி - பேரிகை சாலையில், ரனமந்த குட்டை முனீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 16ம் ஆண்டு பல்லக்கு உற்சவ திருவிழா, கடந்த, 26ல் துவங்கியது. அன்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபி?ஷகம், யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, 50 பல்லக்கு உற்சவம் நடந்தது. இதில் பூக்கள் மற்றும் மின்விலங்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், உற்சவ மூர்த்திகள் சிறப்பு பூஜை செய்து வைக்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, வாணவேடிக்கை மற்றும் குரு?ஷத்திர நாடகம் நடந்தது. மேலும் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்து, சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று காலை, 10:00 முதல், 12:00 மணி வரை எருது விடும் விழா நடந்தது. ஒற்றர்பாளையம், அனா சந்திரம், மோத்துகானப்பள்ளி, சூளகிரி சுற்று வட்டார பகுதி களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இவற்றை இளைஞர்கள் அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தட்டிகளை எடுத்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், சூளகிரி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.