Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமுக்கூடல் கோவிலில் மாசி மக விழா ... விநாயகருக்கு அன்னாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மருவத்தூரில் பவுர்ணமி பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2018
01:03

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பவுர்ணமி பூஜை நேற்று நடந்தது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின், 78வது பிறந்த நாள் விழா, நேற்று முன்தினம் துவங்கி, நாளை வரை நடக்கிறது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலையில், பங்காரு அடிகளாரை, வெள்ளி ரதத்தில் அமர்த்தி, ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். அதன் பின், தனி மேடையில், அடிகளார் அமர்ந்தார். அப்போது, பக்தர்களுக்கு மற்றும் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களின் பொறுப்பாளர்கள், அடிகளாருக்கு பாத பூஜை செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, பவுர்ணமி பூஜையில், 1,008 ஓம் சக்தி விளக்குகள் வைத்து, சிறப்பு வேள்வி பூஜைகள் நடந்தன. எம்.ஏ.எஸ்.எம்., அரங்கில், ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரி மற்றும் ஆதிபராசக்தி தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் கல்வி நிறுவனங்களின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று, மக்கள் நலப்பணி விழா மற்றும் அடிகளார் பிறந்த நாள் விழா மலர் வெளியிடப்படுகிறது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதி டீக்காராமன் உட்பட முக்கிய பிரமுர்கள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிபராசக்தி சக்தி பீடங்கள், வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar