பதிவு செய்த நாள்
02
மார்
2018
01:03
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, பெரியார் நகர், செல்வ விநாயகருக்கு, அன்னாபிஷேகம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை கிராமம், பெரியார் நகரில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம், மகம் நட்சத்திரத்தின் போது, விநாயகருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நேற்று, மாசி மகத்தை முன்னிட்டு, செல்வ விநாயகருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள், அன்னாபிஷேகம் மற்றும் காய், கனி அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகரை தரிசிக்க கூடினர்.