பதிவு செய்த நாள்
03
மார்
2018
01:03
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், 24 மனை தெலுங்கு செட்டியார், அருள்மிகு ஓங்காளியம்மன் திருவிழா, பிப்., 21 இரவு, காவிரி ஆற்றில் புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை, பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று முன்தினம் பொங்கல் விழா நடந்தது. நேற்று காலை, ஏழு குழந்தைகள் கலந்து கொண்ட கன்னிமார் தீர்த்தம் நடந்தது. 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. பின்னர் பூப்பல்லக்கில் வீதி உலா, சிலம்பாட்டம், வாணவேடிக்கை, நையாண்டி மேளம், நாதஸ்வரம் இசைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.