திண்டுக்கல்:கோட்டை மாரியம்மன் மாசித்திருவிழாவில் விடிய, விடிய நடந்த தசாவதாரத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் அம்மன் வெண்ணெய் தாழி அவதாரத்தில் பல்லக்கில் அமர்ந்து மண்டகப்படிகளில் இறங்கி அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக தசாவதாரம் நடந்தது. இதில் அம்மன் காளி அவதாரம் எடுத்து சூரனை வதம் செய்தல், உக்கிர காளி, சாந்த காளி, கூர்ம அவதாரம், மச்ச அவதாரம், ராமர் அவதாரம், கிருஷ்ணனர் அவதாரம், காளிங்கநர்த்தவை, மோகினி அவதாரம் என பத்து அவதாரங்களில் அம்மன் காட்சியளித்தார். தசாவதார நிகழ்ச்சி இரவு 9:00 மணிக்கு துவங்கி காலை 5:30 மணிக்கு நிறைவு பெற்றது. விடிய, விடிய நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விஸ்வகர்ம மகாஜன சபையினரால் நேற்று அம்மனுக்கு மஞ்சன பால் அபி ேஷகம், மஞ்சள் நீராடி மண்டபத்திற்கு வந்தார். சுவாமி வீதி உலா நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் நிர்வாகி சண்முக முத்தரசப்பன் உட்பட பலர் செய்திருந்தனர்.