பதிவு செய்த நாள்
05
மார்
2018
11:03
சென்னை: வேளச்சேரி, தத்தாத்ரேயர் கோவில் மகா கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது. வேளச்சேரி, பேபிநகரில் உள்ள, தத்தாத்ரேயர் கோவில், 1987ல், கணபதி சச்சிதானந்த சுவாமியால் நிர்மாணிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த புதுப்பிப்பு பணியின் போது, விஸ்வேஷ்வரர், தன்வந்திரி, ஹயக்கிரீவர், கணபதி, சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி ஆகிய சன்னதிகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, கோவில் பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேகம் நடத்த, நிர்வாகம் முடிவு செய்தது. நேற்று, மைசூரு அவதுாத தத்தபீடாதிபதி, கணபதி சச்சிதானந்த சுவாமி மற்றும் இளைய பீடாதிபதி, விஜயானந்த தீர்த்த சுவாமி ஆகியோரால், புனரமைக்கப்பட்ட கோவில் பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.காலையில், மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம் நடைபெற்றது. அதைதொடர்ந்து, ஸ்ரீ சக்ர பூஜை, மூலவர் உள்ளிட்ட சன்னதிகளின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.