பதிவு செய்த நாள்
05
மார்
2018
12:03
தர்மபுரி: தர்மபுரி சாய் நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபி?ஷக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த, 1ல் கணபதி பூஜை, நவகிரக ?ஹாமம், சாய்பாபா சிலை பிரதிஷ்டை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள், சாய்பாபா கோவில் கும்பாபி?ஷகம் நடந்தது. அதை தொடர்ந்து, கணபதி, அனுமான், தத்தாத்ரேயர், மகாமேரு, மாரியம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. பகல், 12:00 மணிக்கு, சீரடி சாய்பாபாவுக்கு ஆரத்தி நடந்தது. இதில், சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம், 1:00 மணிக்கு, அன்னதானம் நடந்தது. விழாவில் அமைச்சர் அன்பழகன், முன்னாள் சேர்மன் வெற்றிவேல், சாய்ஆறுமுகம் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.