பதிவு செய்த நாள்
05
மார்
2018
12:03
மகுடஞ்சாவடி: பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மகுடஞ்சாவடி, உலகப்பனூரிலுள்ள பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 18ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, அம்மனுக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுப்ரமணியர் கோவிலிலிருந்து, பக்தர்கள் அக்னி கரகம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலம் வந்தனர். நேற்று காலை, 8:00 மணிக்கு, மாரியம்மன் கோவிலிலிருந்து, மேள, தாளம் முழங்க, காளியம்மன் கோவில் வரை, திரளான பக்தர்கள், பூங்கரகம் எடுத்து வந்தனர். 10:00 மணிக்கு, கோவில் முன்புறம் அமைக்கப்பட்ட குண்டத்தில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திகடன் செலுத்தினர். அதேபோல், இடைப்பாடி, வெள்ளாண்டிவலசு, காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, சக்தி கரக ஊர்வலம், நேற்று நடந்தது.