உசிலம்பட்டி:உசிலம்பட்டி அருகே பேச்சியம்மன் கோயில் பட்டி காளியம்மன், சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி மார்ச் 2 மாலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. மார்ச் 3 இரண்டாம்கால, மூன்றாம்கால யாகசாலை பூஜை நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தெய்வச்சிலை குழுவினர் சிறப்பு பூஜை செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்தனர்.