சுக்ரீவன் என்ற பெயரைக் கேட்டதும் ராமாயண வாலியின் சகோதரரே நம் நினைவுக்கு வருவார். ஆனால், சிவப்பரம்பொருளுக்கும் இப்படியொரு பெயர் உண்டு. பாற்கடலில் தோன்றிய விஷத்தை சிவனார் அருந்தினார். அந்த விஷம் தொண்டையை விட்டு இறங்காதபடி சிவனாரின் கழுத்தை அம்பிகை அழுத்திப்பற்றிக்கொள்ள, விஷம் தொண்டையிலேயே தங்கியது. இதனால் திருநீலகண்டரானார் சிவனார். இதையொட்டி சுக்ரீவர் என்ற பெயரும் சிவபெருமானுக்கு ஏற்பட்டது. ‘கிரீவம் ’ என்றால் கழுத்து. திருநீலகண்டரின் கழுத்து மேலான தியாகத்தை உணர்த்துவதைச் சுட்டிக்காட்டும் வகையில், சிறப்பான கழுத்தை உடையவர் எனும் பொருளில் சுக்ரீவன் எனும் பெயர் அமைந்ததாம்.