பதிவு செய்த நாள்
31
டிச
2011
11:12
திருநெல்வேலி: நெல்லை அருகே மேலதிருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேக விழா வரும் பிப். 6ல் நடக்கிறது.நெல்லை அருகே மேல திருவேங்கடநாதபுரத்தில் தென் திருப்பதி என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இக் கோயில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் கடந்த 2000ம் ஆண்டில் ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.தற்போது வெங்கடாஜலபதி கோயில் விமானம், ராஜகோபுரம், வெளிப்பிரகாரம், தரை தளம், மின் ஒயர்கள் மாற்றம், ஆஞ்சநேயர், கருட வாகனங்கள் புதுப்பித்தல் உட்பட பல்வேறு திருப்பணிகள் 55லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த திருப்பணியை தென்திருப்பதி திருவேங்கடமுடையான் கைங்கர்ய சபா நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இக் கோயில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 6ம்தேதி நடக்கிறது. இதனைமுன்னிட்டு வரும் பிப்.4ம்தேதி முதல் 5ம்தேதி வரை யாக சாலை பூஜைகள் நடக்கின்றன. 6ம்தேதி காலை 9.45 மணிக்கு ஸ்ரீபூமி நீளா அலுமேலு மங்கா சமேத திருவேங்கடமுடையான் சன்னதி, கோபுரங்கள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.இக் கோயில் கும்பாபிஷேகம் குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள் தென்திருப்பதி திருவேங்கடமுடையான் கைங்கர்ய சபா நிர்வாகிகளை 98940-92910, 94434-63197, 98421-64100 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.இத்தகவலை கைங்கர்சபா தலைவர் ஆடிட்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.