பதிவு செய்த நாள்
31
டிச
2011
11:12
பொள்ளாச்சி : கோவை கல்லூரி மாணவர்கள் இணைந்து, பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் தல வரலாற்று அடங்கிய புதிய "வெப்சைட் வடிவமைத்துள்ளனர். தமிழகத்தில், இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில், பெரும்பாலான கோவில்களுக்கு தனியாக இணையதள முகவரி (வெப்சைட்) இல்லாமல் இருந்தது.
பொள்ளாச்சி தாலுகாவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு மட்டும் தனியாக தல வரலாறு "வெப்சைட் உள்ளது. மற்ற கோவில்களுக்கு இதுபோன்று "வெப்சைட் இல்லை. இந்நிலையில், கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் எம்.சி.ஏ., படிக்கும் சுதர்சன், சக்திவேல், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும், ஒத்தகால் மண்டபம் "டிஜெ அகடமி மேலாண்மை கல்வி நிறுவன மாணவர் தருண்குமார் சேர்ந்து நான்கு மாணவர்கள் இணைந்து பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் தலவரலாறு அடங்கிய புதிய "வெப்சைட் வடிவமைத்துள்ளனர்.
மக்கள், "www.ayyappantemplepollachi.in என்ற இணையதள முகவரியில் ஐயப்பன் கோவில் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கம்ப்யூட்டர் நிறுவன நிர்வாகி ஆனந்த் மற்றும் மாணவர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி பகுதியிலுள்ள கோவில்கள் குறித்து அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில், புதிதாக "வெப்சைட் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலுக்காக "வெப்சைட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், ஐயப்பன் கோவிலின் முழு வரலாறு, பரிவார தெய்வங்கள், சிறப்பு பூஜைகள், கோவிலுக்கு வருவதற்கான "கூகுள் வரைபடம், சபரிமலை ஐயப்பன் கோவில் குறித்த முழு தகவல்கள், ஐயப்பனின் பல்வேறு போட்டோக்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
முதல்கட்டமாக, ஆங்கிலத்தில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், நடந்த மண்டல பூஜை போட்டோக்களை இணைத்து தமிழில் இணையதளத்தை வடிவமைப்பதற்கான முயற்சி நடக்கிறது.
இதுபோல், சுப்பிரமணியசுவாமி கோவில், மாரியம்மன் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஆச்சிபட்டி ஆஞ்சநேயர் கோவில்கள் உட்பட முக்கிய கோவில்களுக்கும் தலவரலாறு அடங்கிய புதிய "வெப்சைட் வடிவமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில், தகவல்கள் பெற்று இப்பணி மேற்கொள்ளப்படும், என்றனர்.