ராசிபுரம்: சிங்களாந்தபுரத்தில், அண்ணமார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ராசிபுரம் அருகே, சிங்களாந்தபுரம் அண்ணமார் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம், காவிரி ஆற்றியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, முளைப்பாரி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. தொடர்ந்து, பழனிசாமி சிவாச்சாரியர் தலைமையில் முதற்கால யாகம், நேற்று அதிகாலை அண்ணமார், பொன்னர் சங்கர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மக்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.