Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பலத்த காற்று.. பழநியில் ’ரோப்கார்’ ... ஷீரடி சாய்பாபா கோவில் முப்பெரும் விழா ஷீரடி சாய்பாபா கோவில் முப்பெரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வறண்டு கிடக்கும் திருவொற்றியூர் கோவில் தெப்பக்குளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வறண்டு கிடக்கும் திருவொற்றியூர் கோவில் தெப்பக்குளம்

பதிவு செய்த நாள்

13 மார்
2018
11:03

திருவொற்றியூர்: பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடக்கும், கோவில் குளத்தை துார்வாரி, தண்ணீர் தேங்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். திருவொற்றியூரில், தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஆதிஷேச குளத்தில், பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கவில்லை. 2015ல், கொட்டித் தீர்த்த கனமழைக்கு, பாதியளவிற்கு குளம் நிரம்பியது. இதனால், 10 ஆண்டுகளுக்கு பின், 2016ல், இந்த குளத்தில், தெப்ப உற்சவம் நடந்தது. பின், ஓராண்டு இடைவெளிக்கு பின், குளத்தில் இருந்த முழங்கால் அளவு தண்ணீரில், தெப்ப உற்சவம் நடைபெற்றது.இந்நிலையில், குளத்தை சீரமைத்து, தண்ணீர் தேங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் வடிகால்கள் அனைத்திலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பல்வேறு முறை புகார் தெரிவித்தும் அவற்றை சீரமைக்காமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.

பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் குளத்தில், 26 லட்சம் ரூபாய் செலவில், களிமண் நிரப்பும் திட்டத்தை, கோவில் நிர்வாகம் செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது. எனவே, கோடை காலத்திலேயே குளத்தை துார்வாரி, தண்ணீர் தேங்கும் வகையில் களிமண் நிரப்ப வேண்டும். அப்போது தான், மழைக்காலத்தில் கிடைக்கும் நீர், குளத்திற்கு தேங்கும் நிலை ஏற்படும் என, பக்தர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar