பதிவு செய்த நாள்
15
மார்
2018
12:03
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அருகே, புதிதாக கட்டம் கட்டும் பணியை, இந்து சமய அறநிலையத்துறையினர், தடுத்து நிறுத்தினர். திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ராஜகோபுரம், 72 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக உள்ளது. ராஜகோபுரத்தை சுற்றி, 40 மீட்டர் துாரத்துக்கு, கனரக வாகனங்கள் இயக்கவும், போர்வெல்கள் அமைக்கவும், புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், தோண்டுவதற்கும், தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜகோபுரத்துக்கு இடது புறம், தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில், புதிய கட்டடம் கட்டுவதற்கு, பில்லர்கள் அமைக்க, குழிகள் தோண்டப்பட்டன. இது குறித்து வந்த புகாரின் அடிப்படையில், அங்கு சென்ற, இந்து சமய அறநிலையத்துறையினர், கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தினர். சம்பந்தப்பட்டவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.