Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கை அருகே புதைந்து போன 10ம் ... சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு ஹோமம் சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணகி கோயில் விழாவில் முடிகாணிக்கை செலுத்த தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கண்ணகி கோயில் விழாவில் முடிகாணிக்கை செலுத்த தடை

பதிவு செய்த நாள்

16 மார்
2018
01:03

தேனி;தமிழக- கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, என, தேனி கலெக்டர் எம்.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திருவிழா ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது: கண்ணகி கோயிலில் சித்ராபவுர்ணமி விழா ஏப்.,29ல் நடத்தப்படுகிறது. பக்தர்களுக்காக போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், அசம்பாவிதத்தை தடுக்கவும் குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் 6 சோதனை மையங்கள் அமைக்கப்படும். கூடுதலாக 4 சோதனை மையங்கள் அமைத்து, அதில் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, அவற்றின் உறுதித்தன்மை சோதித்து அதற்கான சான்றிதழ் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மருத்துவம், கழிப்பிடம், பாதை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை வனத்துறை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக சத்தத்தை உண்டாக்கும் ஒலிபெருக்கி, ஜெனரேட்டர், பட்டாசுகள், வெடி பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் சிலைகள் கொண்டு செல்லவும், விளம்பர துண்டு பிரசுரங்களை வினியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு செல்ல, கண்ணகி கோயில் உட்பிரகாரம், வெளிப்பகுதிகள், வனப்பகுதிகளில் முடிகாணிக்கை செலுத்த, வனப்பகுதிக்குள் புகைப்படம் மற்றும் வீடியோ, ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார். பாஸ்கரன் எஸ்.பி., அதிகாரிகள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar