வால் மேல் நடந்த அம்மன் கோவிலில் மாசி களரி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2018 03:03
காளையார்கோவில்:காளையார்கோவிலில் உள்ள வால் மேல் நடந்த அம்மன் கோயில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு, 54 ஆடுகள் பலியிட்டு அன்னதானம் நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட காளையார்கோவில் வாள் மேல் நடந்த அம்மன் கோவிலில் மாசி களரி திருவிழா கடந்த மார்ச் 6 ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. 7 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி தினமும் இரவு அம்மனுக்கு தீபாராதனையும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று வந்தன.திருவிழாவின் இறுதி நாளில் நள்ளிரவு சாமி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த 5 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் விடிய, விடிய அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். 54 ஆடுகள் பலியிடப்பட்டு அன்னதானம் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் பரம்பரை பூஜாரிகள் செய்திருந்தனர்.