வாலாஜாபேட்டை: வாலாஜாபேட்டையில் தன்வந்திரி ஹோமம் நடந்தது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், இயற்கை வளத்திற்காகவும், நேற்று, தன்வந்திரி ஹோமம் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமை வகித்து, பூஜையை நடத்தி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.