மேட்டுப்பாளையம் : காரமடை அருகே யுள்ள மருதுாரில் அனுமந்தராயசுவாமி கோவிலில் தமிழ் மாதம் முதல் சனிக்கிழமையில் ஆஞ்சநேயா அறக்கட்டளை சார்பில் ஆன்மீக சொற்பொழிவும் நடைபெறும்.பங்குனி மாதம் முதல் சனிக்கிழமை விழா நாளை காலை நடைபெற உள்ளது. காலை, 10:00 மணிக்கு தமிழாசிரியர் அரங்கசாமி வில்லி பாரதம் தொடர் சொற் பொழிவை நிகழ்த்து கிறார். மதியம் அன்ன தானம் நடைபெற உள்ளது.