பதிவு செய்த நாள்
22
மார்
2018
12:03
மீஞ்சூர்: வடகாஞ்சி எனப்படும், மீஞ்சூர், காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரநாதர் கோவில், 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் நடைபெறும் விசேஷங்கள் போன்று, அதே நாட்களில் இங்கும் நடைபெறுவதால் இதை வடகாஞ்சி என, அழைக்கப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த இக்கோவிலில், இந்தாண்டின் பங்குனி பிரம்மோற்சவ விழா, நேற்று, காலை, 5:00 மணிக்கு, கொடிஏற்றத்துடன் துவங்கியது. மேளதாளங்கள் மற்றும், சிறப்பு வழிபாடுகளுடன் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன், முருக பெருமான், விநாயகர், சண்டிகேஸ்வர் ஆகிய சன்னதிகளில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. காலை, 8:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளின் வீதிஉலா நடந்தது. மாடவீதிகள் வழியாக சென்ற பஞ்ச மூர்த்திகளை பக்தர்கள் வழிபட்டனர். இன்று, காலை, 8:00 மணிக்கு சூரிய பிரபையில் ஏகாம்பரநாதர் வீதிஉலாவும், அடுத்தடுத்த நாட்களில் பூத வாகனம், நாக வாகனம், அதிகார நந்தி, சப்பரம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இம்மாதம், 27ம் தேதி, தேர் திருவிழா நடைபெற உள்ளது.