Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வல்லக்கோட்டை கோவிலில் மயில்கள் ... தி.மலை  அண்ணாமலையார் கோயில் யானை ருக்கு உயிரிழந்தது: பக்தர்கள் அதிர்ச்சி தி.மலை அண்ணாமலையார் கோயில் யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு... அகற்றப்படுமா? பிரசித்தி பெற்ற தலத்தில் தீராத பிரச்னை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2018
02:03

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவில் செல்லும் வழியில், கடைகளின் ஆக்கிரமிப்பால், கோவிலுக்கு செல்லவும், வாகனங்களை பார்க்கிங் செய்யவும் பக்தர்கள் திண்டாட வேண்டியுள்ளது. பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகும். தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில், பிற மாவட்ட பக்தர்கள் அதிகம் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேங்காய், சூடம், அம்மனுக்கு சாற்றப்படும் சேலைகள் உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்ய, கோவிலுக்குச் செல்லும் வழியில் இருபுறமும், கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில், கோவில் வளாகத்துக்கு அருகிலுள்ள, பத்து கடைகள் ஆனைமலை பேரூராட்சி நிர்வாகத்துக்கும், மீதமுள்ள கடைகள் அனைத்தும் தனியாருக்கு சொந்தமானதாகும். இந்நிலையில், கோவிலுக்குச் செல்லும் வழியில் கோவில் வளாகத்துக்கு அருகிலுள்ள வியாபாரிகள் கடைகளை ரோட்டின் பாதிவரை ஆக்கிரமித்து அமைத்துள்ளனர். மேலும், பூஜை பொருட்கள் வாங்கவரும் பக்தர்களை, தங்கள் கடைகளுக்கு அருகிலேயே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கின்றனர். இதனால், கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், நடப்பதற்கு கூட இடமின்றி கடும் அவதிக்குள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி, கோவிலுக்கு கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பக்தர்கள், ஆக்கிரமிப்பு கடைகளை கடந்து, பார்க்கிங் பகுதிக்கு செல்வதற்குள், இடநெருக்கடியால் திண்டாடுகின்றனர்.இது குறித்து ஆனைமலை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தால், வணிகக் கடைகள் தனியார் இடத்தில் உள்ளது, போலீசார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பதில் அளித்து விட்டு, ஒதுங்கி கொள்கின்றனர். இத்தகைய தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆசியுடன் செயல்படுவதால், ஆனைமலை போலீசார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், இட நெருக்கடியால் சிரமப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வணிகக் கடைகளின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வைசாக அமாவாசைத் திருநாளையொட்டி பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழாவை தொடர்ந்து சுவாமிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar