சித்திரை அமாவாசை: பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2026 10:04
கோவை ; சித்திரை மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர் தங்கள் முன்னோர்களின் ஆசி வேண்டி அவர்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை வைத்து வழிபட்டனர். நிறைவாக காகங்களுக்கு படையல் செய்தனர். இதில் கோவை பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை பாலக்காடு வால்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.