கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழாவை தொடர்ந்து சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேகமும் திவ்யநாமசங்கீர்த்தன நிகழ்ச்சியும் நேற்று நடந்தது.
ஏப்.,11 ல் மஹாசுதர்ஸன ஹோமத்துடன் சம்ப்ரோக் ஷண விழா துவங்கியது, ஏப்., 12ல் வேதபிரபந்தபாரா யணமும், சாற்றுமறை மஹா சம்ப்ரோக் ஷணம், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று மண்டல அபிஷேக பெருவிழா நடந்தது. உற்சவர் ஸ்ரீதேவிபூதேவி கஸ்துாரிரங்கநாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சகலதிரவியங்களில் அபிஷேகம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டார். இசைக்கலைஞர்களின் திவ்ய நாமசங்கீர்த்தன இசைநிகழ்ச்சியும் மஹாஅன்னதானமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.