மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2018 02:03
குளித்தலை: முத்து பூபாள சமுத்திரம் அக்ரஹாரம் டவுன் ஹால் தெருவில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. குளித்தலை டவுன் ஹால் தெருவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த, 23 மாலை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. குளித்தலை சுற்றுவட்டார கிராம மக்கள், கோவில் குடிபாட்டுக்காரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாக்குழு சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி, மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.