பதிவு செய்த நாள்
27
மார்
2018
02:03
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில், வீரவள்ளி குமட்டேரியார் குலாலர் வீட்டு குல தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் புதிதாக கட்டபட்டுள்ள கோவிலில், ரெத்தினகிரீஸ்வர், சுரும்பார்குழலி, கன்னிமார், காமாட்சி, ஆழாத்தி வெள்ளையம்மாள், பெரியசாமி, வைரப்பெருமாள், கருப்புசாமி ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் காலை, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கணபதி ஹோமம் செய்து பூஜை துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை தொடங்கப்பட்டு, காலை, 9:30 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.