பதிவு செய்த நாள்
27
மார்
2018
02:03
வாலாஜாபேட்டை: தன்வந்திரி பீடத்தில், 14வது ஆண்டு விழா நடந்தது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், 14வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, தன்வந்திரி பெருமாளுக்கு, 1,008 கலச அபிஷேகம், இதர பரிவார மூர்த்திகளுக்கு, நவ கலச அபிஷேகமும், சகல தேவதா ஹோமம், கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும், மகா தீபாரதனையும் நடந்தது. திருவலம் சாந்தா சுவாமிகள், பகவதி சித்தர் ராஜகாளி அம்மன் சுவாமிகள், வன துர்கா சுவாமிகள், காசி சுவாமிகள், முரளிதர சுவாமிகள் உள்பட, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.