பதிவு செய்த நாள்
28
மார்
2018
01:03
நாமகிரிப்பேட்டை: ஆர். புதுப்பட்டி மாரியம்மன் கோவிலில், ஏப்., 11ல் தேர்த்திருவிழா நடக்கிறது. நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர்.புதுப்பட்டியில் துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது. தை மாதம் கடைசி செவ்வாய் கிழமை பூச்சாட்டுதலுடன் தேர்த்திருவிழா தொடங்கும். இந்தாண்டு விழா, பிப்., 6ல் துவங்கியது. ஏப்., 11ல் திருவிழா நடக்கிறது. காலை, பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போடும் நிகழ்ச்சி, 10:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கவுள்ளது. வரும், 13ல் சத்தாபரணம் நடக்கிறது. ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறையுடன் இணைந்து, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.